October 26, 2025
இலங்கையின் இளம் தலைமுறையினருக்கு கல்வி, தேடல் மற்றும் படைப்பாற்றலுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் தளம் TikTok
செய்தி

இலங்கையின் இளம் தலைமுறையினருக்கு கல்வி, தேடல் மற்றும் படைப்பாற்றலுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் தளம் TikTok

Oct 8, 2025

(TikTok நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க உறவுகளுக்கான தலைவர் ஃபெர்டௌஸ் மொட்டாகின்)

டிஜிட்டல் தளங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான இடங்கள் அல்ல, மாறாக அறிவுப் பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இலங்கையின் கல்வித் துறையின் டிஜிட்டல் மாற்றம் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் TikTok இன் STEM Feed இன் அங்குரார்ப்பண விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுடன், இதில் இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அரசாங்கத்தின் உயர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு, உலகளாவிய தளங்கள் மற்றும் தேசிய கல்வி முயற்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

கற்போரையும் கற்பிப்போரையும் வலுப்படுத்த டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதில் இலங்கையின் தெளிவான பாதையைக் காண்பது உற்சாகமூட்டியது. அந்த மேடையில் நின்று, மாணவர்களின் எதிர்காலத்திற்காக அரசின் மற்றும் கல்வியாளர்களின் உறுதிப்பாட்டைக் காணும்போது, உண்மையான கூட்டுறவுகள் எவ்வளவு பெரிய மாற்றத்தை விரைவுபடுத்தும் என்பதை உணர்ந்தேன்.

TikTok இல், இந்த ஆற்றல் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இலங்கையில் STEM Feed இன் அறிமுகம் இம்முயற்சியின் ஒரு பகுதியாகும். பதிமூன்று வயதும் அதற்கு மேற்பட்டோருக்கும், STEM Feed அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களை ஈடுபாட்டுடனும், எளிதில் அணுகக்கூடியதாகவும், நாட்டின் டிஜிட்டல் கல்வி இலக்குகளுடன் இணைந்ததாகவும் ஆராய ஒரு தளத்தை வழங்குகிறது.

ஏற்கனவே, லட்சக்கணக்கான இலங்கையர்கள் உருவாக்க, பகிர்ந்துகொள்ள மற்றும் ஊக்கம் பெற ஒவ்வொரு நாளும் TikTok தளத்தைப் பயன்படுத்துகின்றனர். STEM Feed இன் அறிமுகத்துடன், கற்றலை அந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக்க விரும்புகிறோம். இளைஞர்கள் ஏற்கனவே அறிந்து விரும்பும் அதே வடிவமைப்பில் வழங்கப்படுகிறது. இது வெறும் புதிய அம்சம் மட்டுமல்ல, மாறாக இளைஞர்களின் ஆர்வமும் படைப்பாற்றலும் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்கான ஒரு முயற்சியாகும்.

டிஜிட்டல் தளங்களின் STEM மற்றும் டிஜிட்டல் கற்றலில் பங்கு

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இளம் மாணவர்கள் அறிவை புத்தகங்கள் மூலமாக மட்டுமல்ல, ஊடாடக்கூடிய டிஜிட்டல் வடிவங்களிலும் பெறுகிறார்கள். மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, ஒளி-ஒலி கதைகள், தொடர்புடைய செயல்முறை அனுபவங்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடல் மூலம் கற்கிறார்கள். STEM துறைகளில், TikTok போன்ற தளங்கள் விஞ்ஞானக் கருத்துகளை உயிரூட்டமான முறையில் காட்சிப்படுத்தி, ஆர்வத்தை தூண்டுகின்றன. மாணவர்கள் இயற்பியல் பரிசோதனைகளைக் காண்பதோடு, நிரலாக்கம் கற்பதோடு, தொழில்நுட்பத்தின் உண்மை பயன்பாடுகளையும் காணமுடிகிறது. இத்தகைய தளங்கள் தொலைதூர மாணவர்களுக்கும் தரமான கல்வியை அணுகமுடியும் என்பதால், கற்றலில் சமத்துவத்தை ஊக்குவிக்கின்றன. எனினும், பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த கண்காணிப்பும், வழிகாட்டுதலும் அவசியம். சரியான பாதுகாப்பு அமைப்புகளுடன், டிஜிட்டல் தளங்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாக இல்லாமல், அறிவார்ந்த ஆய்வு மற்றும் படைப்பாற்றலுக்கான களமாக மாறுகின்றன.

பாதுகாப்பான டிஜிட்டல் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டில் TikTok இன் பங்களிப்பு

TikTok, இன்றைய இளைஞர்களின் கற்றல் முறைக்கு ஏற்ப, படைப்பாற்றல், அறிவார்வம் மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் தனித்துவ தளமாக உருவாகியுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடுமையான உள்ளடக்க கண்காணிப்பு, வயதுக்கேற்ற கொள்கைகள் மற்றும் துறை நிபுணர்களின் பங்களிப்புடன், STEM Feed துறைகளை ஈடுபாட்டுடன் ஆராயும் வாய்ப்பை வழங்குகிறது. ஆபத்தான பரிசோதனைகள், அரசியல் உணர்திறன் கொண்ட பொருட்கள், மற்றும் தவறான தகவல்கள் வடிகட்டப்பட்டு, பாதுகாப்பான சூழலில் படைப்பாற்றல் செழிக்கிறது. இளம் பயனாளர்கள் குறுகிய, புரிந்துகொள்ள எளிய காணொளிகள் மூலம் நிரலாக்கம், ரோபாட்டிக்ஸ், அறிவியல் ஆகியவற்றை ஆராய முடிகிறது. STEM Feed இன் சிறப்பு என்னவென்றால், வகுப்பறைக்கு TikTok ஐ கொண்டு வருவதற்குப் பதிலாக, மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே கல்வியை எடுத்துச் செல்வது. புவியியல் மற்றும் உட்கட்டமைப்புத் தடைகளைக் கடந்து, அனைத்து இளைஞர்களுக்கும் தரமான STEM கல்வியை அணுக வழிவகுக்கும் பாலமாக இந்தத் தளம் திகழ்கிறது.

கூட்டு முயற்சியும் எதிர்கால நோக்கும்

இலங்கையில் TikTok இன் STEM Feed, தனித்த முயற்சியாக அல்லாமல் ஒரு பரந்த கூட்டுறவின் வெளிப்பாடாகத் திகழ்கிறது. இதில் TikTok தலைமை ஏற்பதற்குப் பதிலாக, உள்ளூர் கல்வியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை விரிவுபடுத்தும் துணை பங்காளியாகச் செயல்படுகிறது. இது இளைஞர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளை மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் ஆராய வாய்ப்பளிக்கிறது. இதன் குறிக்கோள் முறைசார்ந்த கல்வியை நிறைவுசெய்வதோடு, சக மாணவர்களிடையே கற்றலையும் ஊக்குவிப்பதாகும். இலங்கையின் இளைஞர்கள் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் இந்தக் கனவை நனவாக்க, TikTok அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய தளத்தை வழங்குகிறது. இவ்வாறு, எதிர்கால சவால்களுக்குத் தயாரான, டிஜிட்டல் உலகில் தேர்ச்சி பெற்ற, புத்தாக்கம் படைக்கும் தலைமுறையை உருவாக்க இந்தக் கூட்டு முயற்சி உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close