October 26, 2025
HNB மற்றும் TVS Lanka இணைந்து இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்துகின்றன
செய்தி

HNB மற்றும் TVS Lanka இணைந்து இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்துகின்றன

Oct 8, 2025

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Sonalika Tractorsகளை மேம்படுத்துவதற்காக TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணி HNB இன் லீசிங் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, இலங்கையின் விவசாயத் துறையில் நவீன இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும்.

இந்த கூட்டணி மூலம், HNBஇனால் Sonalika Tractorsகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் திட்டங்கள் மற்றும் சிறப்பான நன்மைகளை வழங்குகிறது.

இந்த கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த HNBஇயின் சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் வாடிக்கையாளர் வங்கியியல் தலைவர் திரு. காஞ்சன கருணாகம, “இலங்கையின் நீண்டகால பொருளாதார வலிமைக்கு கிராமப்புற மேம்பாடும் விவசாய உற்பத்தித்திறனும் மிகவும் முக்கியமானவை. TVS Lanka உடனான இந்த கூட்டணி மூலம், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோருக்கு நவீன விவசாய உபகரணங்களை அதிகமான அணுகல் மற்றும் மலிவு விலையில் பெற உதவுகிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட HNBஇன் லீசிங் தீர்வுகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான நிதித் தீர்வுகளும் நம்பகமான ஆலோசனை ஆதரவும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.” என தெரிவித்தார்.

“Sonalika Tractors உயர்தர செயல்திறன், நீண்ட ஆயுட்காலம் மற்றும் எரிபொருள் திறன் போன்ற இன்றைய விவசாய சமூகத்திற்கு அத்தியாவசியமான பண்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. HNB உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், நம்பகமான இயந்திரங்கள் மற்றும் வசதியான நிதி வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு எங்களால் வழங்க முடிகிறது. கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் விவசாயப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் கொண்டுள்ள ஒருங்கிணைந்த இலக்கை இந்த கூட்டணி ஆதரிக்கிறது,” என TVS Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் என்டனி தெரிவித்தார்.

இந்தக் கூட்டணியின் நோக்கம், கிராமப்புற பகுதிகளில் நிதி வாய்ப்புகளை வலுப்படுத்துவதுடன், நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close