லோட்டஸ் நிறுவனக் குழுமத்தின் 10 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மர நடுகையுடன் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் ஏற்பாடு
லோட்டஸ் நிறுவனக் குழுமத்தின் 10 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சமய நிகழ்வுகளோடு பல்வேறு சமூக நல திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. பிங்கிரியவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டு பூர்த்தி விழாவில் வங்கி முகாமையாளர்களுடன் பிங்கிரிய பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுவனம் கடந்து வந்த பாதை குறித்த விவரணப் படமொன்று திரையிடப்பட்டதோடு, தர்ம போதனைகளுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகைத் திட்டத்தின் மூலம் நிலைபேறான கமத்தொழில் துறை மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் பல்வேறு துறைகளில் தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ள லோட்டஸ் நிறுவனக் குழுமம்கமத்தொழில் துறையின் வளர்ச்சி கருதி றவீன தொழில்நுட்ப தீர்வுகளையும் பல்வேறு சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோட்டஸ் குழுமத்துக்குரிய லோட்டஸ் சீட்ஸ் பாம் உயர் தரத்திலான விதை உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது. கூடுதல் அறுவடையை தரக்கூடிய விதைகளுக்கு (கலப்பின விதைகள் உள்ளி்ட்ட) விவசாயிகள் மத்தியில் பெரும் கிராக்கி நிலவுகிறது. லோட்டஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து உரங்கள், பயிர் வளர்ப்புப் பைகள், பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் உலகளாவிய தரத்தின்படி உற்பத்தி செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உற்பத்திகளை பெற முடியும். லோட்டஸ் பிரிண்ட் ஹவுஸ் புத்தாக்க மற்றும் ஆக்கப்பூர்வமான அச்சிடும் சேவைகளை வழங்குகிறது. கடுமையான தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான உற்பத்தி விருத்தி மூலம் விவசாயிகள் அதிக அறுவடைகளை பெறுவதற்கு லோட்டஸ் விதைகள் உதவுகின்றன. லோட்டஸ் க்ரோப் கெயார் உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் விவசாயச் சமூகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பல பூச்சிக்கொல்லிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. லோட்டஸ் உரங்களின் கீழ் தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் காய்கறிச் செய்கைகளுக்கு தேவையான சிறப்பு உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. லோட்டஸ் மெஷினரி நிறுவனம் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி தெளிப்பான்கள், விதைத் தட்டுகள் மற்றும் கமத்தொழில் சாதனங்களை வழங்குகிறது. லோட்டஸ் பேக்கேஜிங், க்ரோ பைகள், பிளாஸ்டிக் தொட்டிகள், அச்சிடப்பட்ட சில்லறை பைகள் மற்றும் PP ரோல்கள் போன்ற பொதியிடல் தீர்வுகளை வழங்குகிறது. லோட்டஸ் குழுமம் ஏராளமான உள்ளூர் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

