September 12, 2025
தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாகவும் இரத்த தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி
செய்தி

தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாகவும் இரத்த தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி

Sep 4, 2025

தங்க ஆபரண விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு நிறுவன வளாகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. கொழும்பு கிழக்கு ரோட்டரி கழகம் மற்றும் CFPS சட்டக் கல்லூரியின் Rotaract கழகத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு தேசிய குருதி மாற்று பிரயோக நிலையத்தின் அலுவலர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இலங்கை தரைப்படை மற்றும் மேலும் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

150 இற்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றதோடு அவர்களில் 100 இற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்வதற்கு தகுதி பெற்றனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் நினைவுச்சின்னமாக பெறுமதிமிக்க புகைப்படமொன்றை வழங்குவதற்கு திருமதி சுஜீவா உள்ளி்ட்ட நித்தியகல்யாணி ஜுவலரி பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். “நாம் மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகளில் ஒன்றான இந்த இரத்த தான நிகழ்வை இம்முறையும் வெற்றிகரமாக நடாத்த எம்மால் முடிந்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இந் நிகழ்வை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என நித்தியகல்யாணி ஜுவலரியின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏ.பீ. ஜெயராஜா தெரிவித்தார். நிறுவனத்தின் சமூகப் பொறுப்பை செவ்வனே உணர்ந்துள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ச்சியாக சமூக மற்றும் சமுதாய நலத் திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. கடற்கரையை தூய்மைப்படுத்தல், சமயத் தலங்களை புனரமைத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வியை மே்படுத்துவதற்கு பங்களிப்பு அளித்தல் அவற்றின் முதன்மையானவை ஆகும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வெள்ளவத்தை நகரில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிக்ழ்ச்சியொன்றையும் இந் நிறுவனம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close