September 12, 2025
“Smart Life Challenge” திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
செய்தி

“Smart Life Challenge” திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Aug 26, 2025

பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மூன்று மாத திட்டமான ‘Smart Life Challenge’இன் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குழுமத்தின் மனிதவளத் துறையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்புத் திட்டத்தில், குழுமத்தின் அனைத்து வணிக அலகுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த முயற்சி மூலம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தவும், வலுவான குழு உணர்வோடு பணியாற்றவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Smart Wellness Solutions (Pvt) நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ரங்கிக ஹெட்டிகம மற்றும் பயிற்சியாளர் சந்தீப் சானக்க ஆகியோர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். சமச்சீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது குறித்து அவர்களின் மதிப்புமிக்க கருத்துக்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சன்ஷைன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சாந்த பண்டார குறிப்பிட்டதாவது, “இத்திட்டம் நம் குழுமத்தின் ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மாத்திரமன்றி, குழு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உதவியுள்ளது. ஒரு நேர்மறையான மற்றும் பலனளிக்கும் பணியிடத்தை பராமரிப்பதற்கு ஊழியர் நலன் முக்கியம்வாய்ந்தது என்பதில் சன்ஷைன் நம்பிக்கைக் கொண்டுள்ளது.” என தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த டொக்டர் ரங்கிக ஹெட்டிகம், “தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் சீராகக் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை ஆகியவை முற்றிலுமாக நல்வாழ்வுக்கு முக்கியமானவை. மேலும், தொழில் மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்திக் கொள்வதோடு, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு சரியான பழக்கங்கள் மற்றும் தவறான முறைகள் பற்றி புரிந்துகொள்வதும் மிக அவசியமாகும். நாளாந்த வாழ்வில் மனதிற்கும் உடலிற்கும் இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதன் மூலம், உடல் மற்றும் உள ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.” என தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பங்கேற்று சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களைக் கௌரவிப்பதுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, ஹெல்த்கார்ட் டிஸ்ட்ரிபியூஷனைச் சேர்ந்த டிஹான் மதுசங்க, அவரது குறிப்பிடத்தக்க தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக ‘Best Transformer’ விருதைப் பெற்றார். Pharma Team 1 இன் அனைத்து உறுப்பினர்களும் குறைத்துக்கொண்ட மொத்த எடைக்காக ‘Champion Team’ விருதைப் பெற்றனர். இதற்கிடையில், சன்ஷைன் ஃபார்மாசூட்டிகல்ஸைச் சேர்ந்த திருச்செல்வனேசம் லோகராஜ், இத்திட்டம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்கென ‘Most Committed Participant’ விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களும், வாரத்திற்கு இரண்டு முறை, தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் நடத்தப்படும் தனிப்பட்ட ஆலோசனை அமர்வுகளில் (one-on-one coaching sessions) இணைந்தனர். இந்தத் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள், ஒவ்வொரு நபரின் தேவைக்கும் ஏற்ப தேவையான வழிகாட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் வழங்கினர்.

‘Smart Life Challenge’ திட்டத்தின் இந்த கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், இத்திட்டம் குழுமத்தின் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை எவ்வாறு நேர்மறையான மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது என்பதைப் பாராட்டியது. ஆரோக்கியமான மற்றும் பலனளிக்கும் தொழிலாளர் சக்தியை பராமரிப்பதற்கான குழுமத்தின் உறுதியான அர்ப்பணிப்பு இதன்மூலம் தெளிவாக பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close