August 14, 2025
Exterminators PLC பட்டய முகவர் நிலையங்களுடன் 14 மாவட்டங்களுக்கு தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை
செய்தி

Exterminators PLC பட்டய முகவர் நிலையங்களுடன் 14 மாவட்டங்களுக்கு தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

Aug 13, 2025

Exterminators PLC (www.exterminators.lk) நிறுவனம், Sentario UK நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும், ஜேர்மன் நாட்டின் Futura GMBH மற்றும் நெதர்லாந்தின் Pest Scan BV ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாய கூடடாண்மையுடனும் தமது அதிநவீன டிஜிட்டல் பீடைகள் (தீங்குயிர்கள்) முகாமைத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட சேவைகளை பட்டய உரிமத்துவ (Franchise) முறையின் கீழ் 14 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் போது வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பீடைகள் முகாமைத்துவத் துறையை ஒரு புதிய தடத்துக்குள் கொண்டுச் செல்வதே நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த முயற்சி சீரழிந்த பல்லுயிர் கட்டமைப்பை மீட்டெடுக்கவும் தும்பிகள், மீன்கள், தவளைகள் மற்றும் வௌவால்கள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்வதற்கேற்ற சூழல் தொகுதியொன்றை மீள உருவாக்கவும் உதவும்.

Exterminators நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கிசூ கோமஸ் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மறுமலர்ச்சியானது,   தொலைதூரப் பகுதிகளுக்கு வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை மிக வலுவாக ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த அணுகுமுறையின் மூலம்  நிறுவனத்துக்கு வணிக வளர்ச்சியை அடைய முடிவதோடு, வாடிக்கையாளர்களுக்கு தமது வளாகத்தை பூச்சித் தொல்லைகளற்ற இடமாக மாற்றுவதற்கும் முடியும். நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு மாலன் பெரெயிரா கருத்து தெரிவிக்கையில், “தற்போது குறைந்தபட்சம் சுமார் 5%  வருமான வீதத்தை கொண்டுள்ள மேற்படி 14 மாவட்டங்களை அணுகுவது வளர்ச்சியை அடைவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பெனக் கூற வேண்டும். அடிப்படைக் கட்டணங்கள், உரித்துக் கட்டணங்கள், விநியோக விற்பனை போன்றவற்றின் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கிறோம். ஒரு பட்டய முகவர் நிறுவனத்தின் ஊடாகவேனும் துரிதமாக இலாபம் ஈட்ட முடியுமென நிதி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாமே கிளைகளை அமைப்பதானது செலவு அதிகம் என்பதோடு ஆபத்தானதென்பதால் இது மிகவும் நிலையானதொரு முயற்சியாகும்.  தொழில்வாய்ப்புகள் உருவாகின்றமை, சமுதாயப் பங்கேற்பு அதிகரித்தல், உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் இதன் மூலம் இடம்பெறுகின்றன. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதோடு வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதும் எமது நோக்கமாகும். அதன் மூலம் நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில் பூச்சிக் கட்டுப்பாடு சேவைகளை வழங்க முடியும்” என தெரிவித்தார். பட்டய முகவர்களுக்கு பயிற்சி திட்டங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல் மற்றும் மேலும் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. இதில் பூச்சி முகாமைத்துவத் தீர்வுகள், தொலைதூர கொறித்துண்ணி கண்காணிப்பு தூண்டில்கள், டிஜிட்டல் ஈ பூச்சிக் கொல்லிகள், உணவுப் பயிர் பூச்சி முகாமைத்துவத் தீர்வுகள், பராமரிப்புத் திட்டங்கள், பூச்சிகள் முகாமைத்துவ ஆலோசனைத் திட்டங்கள் மற்றும் கல்வி சார் செயலமர்வுகள் ஆகியவை அடங்கும். பட்டய முகவர்களிடையே உயர் சேவைத் தரத்தைப் பேணும் நோக்கத்துடன் பயிற்சிக் கல்லூரியொன்று நிறுவப்படும். வாடிக்கையாளர் விசாரணைகளுக்காக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர அழைப்பு நிலையம் நிறுவப்படும். Exterminators (hello@exterminators.lk) (0117760760) தமது வணிகத்தை சீஷெல்ஸ் மற்றும் மாலைத்தீவுகள் போன்ற நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய ரீதியாக எழுந்துள்ள பூச்சி சவால்களை சமாளிப்பதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் பங்களிக்க முடியுமென நிறுவனம் நம்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close