August 15, 2025
உலகளாவிய வணிக வலையமைப்புத் தளம் Network In Action (NIA) இலங்கையில் அறிமுகம்
செய்தி

உலகளாவிய வணிக வலையமைப்புத் தளம் Network In Action (NIA) இலங்கையில் அறிமுகம்

Aug 4, 2025

உலகளாவிய வணிக வலையமைப்புத் தளமான Network In Action (NIA) தளத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் வைபவம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தொழில் முயற்சியாளர்கள், தொழில் வல்லுநனர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் தலைமையில் நடைபெற்றது.  NIA இன் இலங்கை பிரதிநிதிகளான ஜயதாஸ் கமலநாதன் மற்றும் பமதீசன் கோபாலப்பிள்ளை ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி வைபவத்தில் NIA செயற்படும் விதம் குறித்தும் அது சம்பிரதாயபூர்வமான வலையமைப்பியல் அனுகுமுறைகளிலிருந்து மாறுபடும் விதம் குறித்தும் பரந்துபட்ட அறிவை பெறுவதற்கான வாய்ப்பு இதில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்தது. வைபவத்தின் தொடக்கத்திலேயே தலைமைத்துவக் குழு ஆரம்ப சமர்ப்பணத்தை வெளியிட்டது. NIA வகை குழுக்களின் அமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட  NIA தளம் உலகெங்கிலும் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ளது. அதில் பௌதீக குழுக்களின் அமர்வுகள் மற்றும் முதலீட்டு அனுகூலங்களை அளவிடல் மற்றும் வலுவான தொடர் தொழில்முறை உறவுகளை பேணுவதற்கு உதவும் தொழில்நுட்ப தளமொன்றும் உள்ளடங்கும். அதே கட்டமைப்பை கொண்ட இலங்கை NIA அத்தியாயம் மாதாந்த அமர்வுகள், செயலாற்றுகையை அளவிடுவதற்கான செயன்முறைகள், நிண்ட கால தொழில்முயற்சி விழுமியங்களை கட்டயெழுப்புவதற்கான கற்பித்தல் பரிமாற்றல் திட்டங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆரம்ப வைபவத்தின் போது NIA Colombo இன் ஆரம்ப அங்கத்தவர்களை சந்திப்பதற்கும் காத்திரமான கலந்துரையாடல்களுக்காக உருவாக்கப்பட்ட சூழலில் தொழில்வல்லுநர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்குமான வாய்ப்பு விருந்தினர்களுக்கு கிடைத்தது. அமைப்புசார்தன்மை, பொறுப்புடைமை மற்றும் உலகளாவிய தர நிர்ணயங்களுக்கான அனுகுமுறையுடன் கூடிய வணிகச் சமூகமொன்றை உருவாக்குவதே தமது நோக்கமென ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. ”இலங்கையில் ஏராளமான தொழில்முயற்சியாளர்களும் தொழில் வல்லுநர்களும் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்குமே மிகப் பொருத்தமான தரப்புகளுடன் தமது வளர்ச்சியை அடைவதற்கான தொடர் பாதையொன்று தேவை. NIA ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர்களுக்கு அப்பாதையை அமைத்துக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என திரு கமலதாசன் தெரிவித்தார்.” இது சந்தைப்படுத்தல் அல்லது சுய ஊக்குவிப்புக்கான அனுகுமுறை அல்ல. உண்மையான வளர்ச்சிக்கு தேவையான உண்மையான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு NIA Colombo அங்கத்தவர்களால் கட்டாயமாக முடியும்.” என திரு கோபாலப்பிள்ளை தெரிவித்தார். NIA Sri Lanka தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தேவையான விபரங்களை  srilanka@networkinaction.lk  அல்லது 0777667102 மற்றும்  0772999519  தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close