
ISO 414 தரச் சான்றிதழுடன் கூடிய வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் மெல்வா நிறுவனம்
இலங்கையின் உறுக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் முன்னணியில் திகழும் மெல்வா நிறுவனம் வேல்டிங் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வேல்டிங் கம்பிகளை புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு SLS 414 தரச் சான்றிதழ் கிடைத்ததன் மூலம் மேற்படி வேல்டிங் கம்பிகளின் சிறப்பு மற்றும் உயர் தரம் உறுதியாகியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக 100% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வேல்டிங் கம்பிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்திய பெருமை மெல்வா நிறுவனத்தையே சாரும். இப் புதிய வேல்டிங் கம்பிகளை அறிமுகப்படுத்துவதற்கு இணையாக வேல்டிங் தொழிலாளர்களுக்கு விஷேட செயலமர்வொன்றும் கடந்த மாதம் 24 ஆம் திகதியன்று பலங்கொடையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வேல்டிங் தொழிலாளர்களுக்கு முதல் தடவையாக இப் புதிய வேல்டிங் கம்பிகளை பாவிப்பதற்கான வாயப்பு வழங்கப்பட்டதோடு அந்த உற்பத்திக்கு அவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. இலகுவான பாவனை, பாதுகாப்பு மற்றும் உறுதி தொடர்பான சாதகமான கருத்துக்கள் வேல்டிங் தொழிலாளர்களிடமிருந்து வெளிப்பட்டன.
கம்பிகள் மற்றும் கெல்வனைஸ் தகடுகளை வலுமிக்கதாக, நீண்ட கால பாவைனயுடைய, மிகக் கச்சிதமாக ஒட்டுவதற்கு வேல்டிங் தொழிலாளர்களின் முதன்மை தெரிவாக இப் புதிய வேல்டிங் கம்பிகள் இருக்குமென்பதே மெல்வா நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். மேலான பாதுகாப்புடன் தமது கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு இப் புதிய வேல்டிங் கம்பிகள் வேல்டிங் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சர்வதேச தர நியமங்களுக்கமைய உயர் தரத்திலான மூலப்பொருட்களை கொண்டு மேற்படி வேல்டிங் கம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் முழுமையான நிறைவுத் தோற்றத்துடன் கூடிய வேல்டிங் பணிகளுக்கு இப் புதிய உற்பத்தி உந்துசக்தியாக இருக்கும். வேல்டிங் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வரும் மெல்வா நிறுவனம் அதற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. வேல்டிங் தொழிலாளர்களுக்கு பயிற்சி செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு தொழில் சார் மட்டத்திலான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெறுவதற்கு அனுசரணை வழங்குதல் (தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை வழங்கும் NVQ 3 நிலை தேசிய சான்றிதழ்) பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துணைக் கருவிகளை வழங்குதல் அவற்றின் முதன்மையானவை ஆகும். சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி GI குழாய்கள் மற்றும் Box Bar பயன்படுத்தும் விதம் குறித்தும் பாதுகாப்பாகவும் சீராகவும் வேல்டிங் செய்யும் விதம் குறித்தும் வேல்டிங் தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் மெல்வா நாட்டின் கட்டுமானத் துறையின் இருப்புக்கு பெரும் பங்களிப்பை வழங்குகிறது.