August 15, 2025
இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung
செய்தி

இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung

Jul 15, 2025

இலங்கையில் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மார்ட் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொலைதூர வேலை முறைகள் மற்றும் வீட்டு தானியங்கி மயமாக்கல் (home automation) போன்றவற்றின் வளர்ச்சியால், இலங்கை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் தொழில்நுட்பங்களை நாடுகின்றனர். இந்நிலையில், நவீன இலங்கை குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப Samsung தனது அதிநவீன ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகளை வழங்கி முன்னணியில் திகழ்கிறது.

ஸ்மார்ட் வீட்டு தொழில்நுட்பத்தில் நம்பகமான புத்தாக்க நிறுவனமாக Samsung திகழ்கிறது. இணைக்கப்பட்ட வாழ்க்கை முறைகளுடன் சீராக ஒருங்கிணையும் செயற்கை நுண்ணறிவு கொண்ட பல்வேறு வீட்டு உபகரணங்களை வழங்குகிறது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் மையமாக Samsung இன் ஸ்மார்ட்திங்ஸ் (SmartThings) தளம் விளங்குகிறது. இது பாவனையாளர்கள் வீட்டிலிருந்தோ அல்லது வெளியில் இருக்கும்போதும், ஒரே செயலி வழியாக தொலைக்காட்சிகள் முதல் சலவை இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்று சீராக்கிகள் (air conditioners) வரை பல்வேறு சாதனங்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.

இலங்கையில் Samsung ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் வாடிக்கையாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சலவை எடை மற்றும் துணி வகைகளை அறிந்து துவைப்பு சுழற்சிகளை தானாகவே சரிசெய்யும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட சலவை இயந்திரங்கள், அதிக கொள்வனவு திறன் கொண்ட புத்திசாலி குளிர்சாதனப் பெட்டிகள், மின்சக்தி சேமிப்பு அமைப்புகள், மற்றும் பயனாளர் பழக்கங்களை கற்றுக்கொள்ளும் AI தொழில்நுட்பம் கொண்ட காற்று சீராக்கிகள் ஆகியவை ஆற்றல் திறன் வாய்ந்த வாழ்க்கைக்கான Samsung இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தொலைதூர கட்டுப்பாடு, தனிப்பயனாக்கப்பட்ட AI அமைப்புகள், மற்றும் நிகழ்நேர செயல்திறன் கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன், Samsung நுகர்வோருக்கு அன்றாட வசதியை அதிகரிக்கும் அதே வேளையில் மின்சார பயன்பாட்டை உகந்த முறையில் பயன்படுத்த உதவுகிறது.

இது குறித்து Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘Samsung இன் ஸ்மார்ட் உபகரணங்கள் இலங்கை வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்ப செயல்பாடுகளுடன் நடைமுறை நன்மைகளையும் இணைத்து வழங்குகின்றன. மக்களின் வாழ்க்கை முறைகள் அதிக இணைப்புடன் கூடிய திறன்மிக்க வாழ்வை நோக்கி மாறிவரும் நிலையில், எங்களின் தீர்வுகள் புத்தாக்கம் மற்றும் பாவனையளர்-மைய வடிவமைப்பின் சிறந்த கலவையை வழங்குகின்றன.’ என தெரிவித்தார்.

Samsung இன் ஸ்மார்ட் உபகரணங்கள் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரின் தேவைகளுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குகின்றன. இந்த நன்மைகள் வெறும் வசதிக்கு மட்டுமல்லாமல், ஆற்றல் பாதுகாப்பிற்கும் பங்களிக்கின்றன. குடும்பங்களுக்கு மின்சார கட்டணங்களைக் குறைக்க உதவுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கின்றன.

Samsung இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையின் எல்லைகளை விரிவுபடுத்த தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, பல்வேறு சாதனங்களுக்கிடையேயான இணைப்பு மற்றும் புத்திசாலித்தனமான ஆற்றல் மேலாண்மை கருவிகள் அடங்கிய புத்தாக்க திட்டங்களுடன் இலங்கையர்கள் தங்கள் வீடுகளில் வாழும், பணிபுரியும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறைகளின் எதிர்காலத்தை நிறுவனம் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.

ஆர்வமுள்ளவர்கள் புதிதாக திறக்கப்பட்ட Damro, Marino Mall மற்றும் Singer One Galle Face Mall ஆகிய இடங்களில் உள்ள Samsung செயற்கை நுண்ணறிவு பகுதிகளுக்கு விஜயம் செய்து, சமீபத்திய WIFI வசதி கொண்ட மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்ட Samsung தயாரிப்புகளை நேரில் கண்டு அனுபவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close