August 15, 2025
Queen மருத்துவமனைக்கு சொந்தமான Golden Heart Age Careமுதியோர் பராமரிப்பு நிலையம் அங்குரார்ப்பணம்
செய்தி

Queen மருத்துவமனைக்கு சொந்தமான Golden Heart Age Careமுதியோர் பராமரிப்பு நிலையம் அங்குரார்ப்பணம்

Jun 29, 2025

Queen மருத்துவமனைக்கு சொந்தமான Golden Heart Age Care முதியோர் பராமரிப்பு நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அன்பு மற்றும் கருணை நிறைந்த ஒரு சூழலில் மூத்த பிரஜைகள் தொடர்பாக தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாதுகாப்பதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். சிறப்பு பயிற்சியை பெற்றுள்ள மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதார நிபுணர்களை கொண்ட Golden Heart Age Care நிறுவனத்தின் பணியாட்டொகுதியினர் சகல முதியோர்களுக்கும் ஆகச் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.  இந் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிரதான பராமரிப்பு பக்கேஜுக்கு செலுத்த வேண்டிய மாதாந்த கட்டணம் 90,000 ரூபாய் ஆகும். அதில் மருத்துவப் பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு மற்றும் இதர பல சேவைகள் அடங்கும். மூத்த பிரஜையின் சுகாதார நிலைமைக்கேற்ப அறவிடப்படும் கட்டணம் மாறுபடக்கூடும். விஷேட தேவைகளின் பேரில் தனித்துவமான பக்கேஜுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் உண்டு.

Golden Heart Age Care நிறுவனம் சிரேஷ்ட பிரஜைகளுக்காக பல்வேறு நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. சமூக ஊடாட்டங்களை மேம்படுத்தும் குழுச் செயற்பாடுகள் மற்றும் சமய தலங்களை தரிசிப்பதற்கு அவர்களை அழைத்துச் செல்லுதல் அவற்றில் பிரதான பணிகளாகும். அதன் மூலம் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மன அமைதியும் ஆன்மீக சுகமும் கிடைக்கும். இன்றைய நவீன உலகில் அநேகமானோருக்கு வேலைப்பழு மிக்க வாழ்க்கை முறை காரணமாக தமது பெற்றோர் உள்ளிட்ட முதியோர்களை பராமரிப்பது கடினமாகியுள்ளதை புரிந்துகொண்டுள்ள அந் நிறுவனம் குறுகிய கால மற்றும் அன்றாட முதியோர் பராமரிப்பு சேவையினையும் வழங்குகிறது. அதன் மூலம் குறுகிய காலத்துக்கேனும் முதியோர்களை இந் நிறுவனத்தில் தங்க வைக்க முடியும். Queen மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் இதர சுகாதார சேவை வல்லுநர்கள் சிறந்த சேவையினை வழங்குகின்றார்கள். அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன், எக்ஸ் ரே போன்ற நவீன வசதிகளையும் கொண்டுள்ள அந் நிறுவனம் இரத்மலானை, களுத்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, மொரட்டுவை,கட்டுபெத்த, மஹரகம, அத்திடிய, பிலியந்தல, அத்திடிய போன்ற பகுதிகளில் வசிக்கும் நோயாளர்களை கொழும்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உயர் தரத்திலான சிகிச்சை வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close