
City of Dreams Sri Lanka ஆகஸ்ட் 2, 2025இல் திறப்பு: தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தின் ஒரு மைல்கல்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக் குறிக்கிறது.
இந்த மைல்கல் கூட்டணி, தெற்காசியாவின் முதல் முழு ஒருங்கிணைந்த ரிசார்ட்டின் அறிமுகத்தையும், இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறைத் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தனியார் துறை முதலீட்டையும் குறிக்கிறது – இது 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திட்டம், இது உலக சுற்றுலாப் வரைப்படத்தில் கொழும்பின் நிலையை மறுவரையறை செய்கிறது.
கொழும்பின் மையப்பகுதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த ரிசார்ட், உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல், உயர்தர சில்லறை வணிகம், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் அதிநவீன MICE (கூட்டங்கள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒரு ஆற்றல்மிக்க இலக்கில் ஒன்றிணைக்கிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- 800 அறைகள் மற்றும் அதி சொகுசு அறைகள்: இதில் அக்டோபர் 2024 இல் ஆரம்பிக்கப்பட்ட “Cinnamon Life” வர்த்தக நாமத்தின் கீழ் 687 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் மற்றும் Melcoவின் முதன்மை “Nüwa” வர்த்தக நாமத்தின் கீழ் 113 அறைகள் கொண்ட அல்ட்ரா-சொகுசு ஹோட்டல் ஆகியவை அடங்கும்.
- விரிவான MICE வசதிகள்: உலகளாவிய வணிக நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை நடத்த வடிவமைக்கப்பட்டவை.
- அதிநவீன கேசினோ மற்றும் பொழுதுபோக்கு வலயம்: சர்வதேச ஆடம்பர சூதாட்ட தரங்களுக்கு ஏற்ப Melcoவால் இயக்கப்படும்.
- பிரபல சர்வதேச சமையல்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான சிறப்பு உணவகங்களின் தொகுப்பு.
- சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார காட்சிகளுக்கான ஆழ்ந்த பொழுதுபோக்கு இடங்கள்.
City of Dreams தனது புகழ்பெற்ற வர்த்தக நாமத்தை ஒரு துடிப்பான புதிய சந்தைக்கு விரிவுபடுத்துகையில், இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தையும் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் சுற்றுலாத் தேவையையும் இது பயன்படுத்துகிறது. ஆடம்பர விருந்தோம்பல் மற்றும் கேமிங்கில் உலகளாவிய நிபுணத்துவத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் சுற்றுலா சலுகைகளின் தரம் மற்றும் கவர்ச்சியை உயர்த்த இந்த ரிசார்ட் தயாராக உள்ளது. City of Dream Sri Lanka ஒரு ரிசார்ட்டை விட அதிகம் – இது ஒரு புதிய வாழ்க்கை முறை இயக்கத்தின் மையப்புள்ளியாகும், இங்கு நவீனத்துவம், நேர்த்தியானது மற்றும் உள்ளூர் கலாச்சாரம் இணைகின்றன. இந்த முக்கிய திட்டம் ஆடம்பரம், நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான புதிய அளவுகோல்களை அமைத்து, பிராந்தியத்தின் சுற்றுலாப் பிம்பத்தை மறுவரையறை செய்கிறது.
- சுற்றுலா வினையூக்கி: இந்த உல்லாச விடுதி சர்வதேச வருகையாளர்களின் எண்ணிக்கையை, குறிப்பாக இந்தியா மற்றும் பிற அண்டையப் பிராந்தியங்களிலிருந்து, பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கொழும்பை ஒரு உயர்தர MICE (கூட்டங்கள், ஊக்கப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) இடமாக நிலைநிறுத்தும்.
- நிலையான வளர்ச்சி: இந்த உல்லாச விடுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. அத்துடன், பொறுப்பான சுற்றுலாவிற்கான ஒரு உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.