
சிறந்த வாகன Detailing சேவை வழங்குநருக்கான BWIO விருதை இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ள Pink Auto Shop நிறுவனம்
இலங்கையின் முன்னணி வாகன Detailing சேவை வழங்குநரான Pink Auto Shop நிறுவனம் Business World International Organization ஏற்பாடு செய்த BWIO 2025 வருடாந்த விருது விழாவில் இலங்கையின் ஜனரஞ்சகமான வாகன Detailing சேவை வழங்குநர் எனும் விருதை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது. உயர் தரத்திலான வாகன Detailing சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Pink Auto Shop வாகன Detailing துறையுடன் தொடர்புடைய சகல சேவைகளையும் வழங்குகிறது. Pink Auto Shop நிறுவனம் ISO சான்றிதழை பெற்ற வாகன Detailing சேவைகளை வழங்குமொரு நிறுவனமாகும். இத்தாலி நாட்டின் RUPES, ஐக்கிய இராச்சியத்தின் Gtechniq, அமெரிக்காவின் STEK மற்றும் JAX WAX மற்றும் சீனாவின் SGBC போன்ற இத் துறையின் பெரும் வர்த்தகநாமங்களுடன் இணைந்து Pink Auto Shop நிறுவனம் தற்பொழுது முன்னணியில் திகழ்கிறது. Pink Auto Shop நிறுவனம் சர்வதேச தர நியமங்களுக்குட்பட்ட இலங்கையின் ஒரே வாகன Detailing சேவை நிலையத்தை BigFoot எனும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பெண்களுக்கும் இத் துறையில் கால் பதிப்பதற்கான வாய்ப்பினை முதல் தடவையாக உருவாக்கி ஏராளமான தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இந் நிறுவனத்தின் இணை நிறுவனமான Pink Academy வாகன Detailing தொடர்பான உயர் அங்கீகாரத்துடன் கூடிய பல்வேறு கற்கை பாடநெறிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றுக்கு மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு NVQ நான்காம் கட்ட சான்றிதழையும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற RUPES சான்றிதழையும் வழங்குகிறது. சுமார் 07 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ள Pink Auto Shop இன் இரண்டாவது கிளை தெற்காசியாவின் மிகப் பெரிய வாகன Detailing நிலையமாகும். இத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந் நிறுவனம் எல்லையில்லா தடவைகள் இலவச வாகன Wash, Vacuum, Wax ஆகிய வசதிகளை Pinkfinity ஊடாக தமது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. புத்தாக்கத்தையும் ஆக்கத்திறனையும் பெரிதும் மதிக்கும் இந் நிறுவனம் நாட்டின் ஆகச் சிறந்த ஜனரஞ்சக மோட்டார் வாகன கண்காட்சியான The Pinkfest உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Pink Auto Shop கிளைகள் கோட்டே மற்றும் மாதிவெல நகரங்களுக்கு அண்மித்ததாக அமைந்துள்ளன.