August 15, 2025
கோலாகலமாக நடைபெற்றBusiness World International Organization – 2025 விருது விழா
செய்தி

கோலாகலமாக நடைபெற்றBusiness World International Organization – 2025 விருது விழா

May 10, 2025

Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த BWIO விருது விழா கடந்த ஏப்பிறல் மாதம் 05 ஆம் திகதி கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வர்த்தக சமூகத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான விருந்தினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழாவில் நாட்டின் புகழ் பெற்ற பல்வேறு நிறுவனங்களும் நபர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  விருது விழாவின் பிரதம விருந்தினர்களாக  கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி (இலங்கைக்கான நேபாளத் தூதுவர்) மற்றும் பேராசிரியர், கலாநிதி டியட்மார் டோரிங் (AGSEP Research தலைவர்/ ஸ்தாபகத் தலைவர் மற்றும் BWIO இன் ஆலோசனைக் குழு அங்கத்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக தம் வை லோங்க் (இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர்), பேராசிரியர், கலாநிதி ரொஹான் டீ சில்வா (இலங்கை சிறிய மற்றும் மத்திய அளவிலான கைத்தொழில் சபையின் தலைவர்), ஓய்வுநிலை மேஜர் ஜெனரால் ஆர்.ஏ.ஜே.என். ரணசிங்க, கலாநிதி ரொஹான் பல்லேவத்த (நிறைவேற்றுத் தலைவர் – லங்கா ஹார்னஸ்) கலாநிதி கிசூ கோமஸ் (தலைவர் – Exterminators PLC, டிரிம்ரொன் குழுமத்தின் பணிப்பாளர், தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் ஆலோசனைக் குழு அங்கத்தவர் – இலங்கை சுற்றுலாச் சபை), டயன் கோமஸ் (ஜோர்ஜிய கொன்சல், தலைவர் – கொழும்பு வணிக முகாமைத்துவக் கல்லூரி மற்றும் சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளர் – நெஸ்லே லங்கா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர், கலாநிதி நிஸ்சங்க வீரப்புலிகே (ஐக்கிய அமெரிக்க BWIO  ஆலோசனைக் குழு அங்கத்தவர்), பேராசிரியர், கலாநிதி டேம் அனோமா வீரரத்ன விஜேநாயக்க (ஐக்கிய அமெரிக்க BWIO ஆலோசனைக் குழு அங்கத்தவர்), ஜர்ட் ஹையின்சர்லிங்  (ஐக்கிய அமெரிக்க BWIO ஆலோசனைக் குழு அங்கத்தவர்), பிறியந்த பத்மசிறி (இலங்கை – கனடா வணிகப் பேரவையின் தலைவர்), எம். எச்.கே.எம் ஹமீஸ் (இலங்கை – கனடா வணிகப் பேரவையின் உப தலைவர் மற்றும் இலங்கை – மலேசிய வணிகப் பேரவையின் முன்னாள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கலாநிதி அந்தனி டெக்ஸ்டர் பிரனாந்து (ஐக்கிய அமெரிக்க BWIO தலைவர் – சர்வதேசப் பிரிவு), கலாநிதி தரிந்து விஜேநாயக்க (ஐக்கிய அமெரிக்க BWIO  பிரதித் தலைவர் – சர்வதேசப் பிரிவு) மற்றும் கலாநிதி எமரிட்டா விஜேநாயக்க (ஐக்கிய அமெரிக்க BWIO கருத்திட்டத் தலைவர் மற்றும் பணிப்பாளர் – சர்வதேசப் பிரிவு) ஆகியோர் வருகைத் தந்த அதிதிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close