August 15, 2025
Tree House சர்வதேச பாடசாலைக்கு BWIO விருது
செய்தி

Tree House சர்வதேச பாடசாலைக்கு BWIO விருது

Apr 28, 2025

தெகிவளையில் அமைந்துள்ள Tree House சர்வதேசபாடசாலையானது, சிறந்த சான்றுகள்/ஆதாரங்களை  அடிப்படையாக கொண்டு இயங்குகின்ற விசேட  தேவைகள் (special needs) உடைய மாணவர்களை கொண்ட சர்வதேச பாடசாலையாக  BWIO வினால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினை வென்றுள்ளது. இலங்கையில் விசேட  தேவைகள் உள்ள மாணவர்களுக்காக மட்டுமே இயங்குகின்ற  ஒரே ஒரு  சர்வதேசப் பாடசாலையான இங்கு கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 75%  ஆனோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் தரத்திலான மற்றும் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட கல்வியை பெற முடிகின்றமையே அதற்கு காரணமாகும். கடந்த தவணையில் இங்கு கல்வி கற்ற மாணவர்களில் 100% மாணவர்கள் பிரதான பாடசாலையில் கல்வி வாய்ப்புக்களை பெறுவதற்கும், தொழிற்கல்வி பயிற்சியை பெற்றுக்கொள்ளவும் பிரவேசித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சர்வதேச அனுபவத்தைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட நடத்தைசார் உளவியல் நிபுணர் கலாநிதி. அன்டன் ஜேம்ஸ் அவர்கள் இப் பாடசாலையை வழிநடத்துகிறார். அவரது சான்றுகள் சார்ந்த அணுகுமுறையானது பிரித்தானிய உளவியல் சங்கத்தின் அங்கீகாரத்தையும், மிக உயர்ந்த கௌரவத்தையும்  பெற்றதுடன் , அவர் அங்கீகரிக்கப்படட நடத்தைசார் உளவியல் விஞ்ஞானியாகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு, சர்வதேச விசேட   தேவைகள் துறையில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள சிறப்பு நிபுணரான கிறிஸ்டல் ஹொன்சேகர் இப் பாடசாலையின் இணைப் பணிப்பாளராக பணியாற்றுவதுடன் இங்கு GCSE இற்கு மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய பாடத்திட்டங்களின் கீழ் கற்பித்தல் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close