August 16, 2025
ஆண்டின் சிறந்த பல் மருத்துவமனைக்கான PINNACLE விருதை வென்றுள்ள இன்டர்நேசனல் டென்டல் கெயார்  (IDC) மருத்துவமனை
செய்தி

ஆண்டின் சிறந்த பல் மருத்துவமனைக்கான PINNACLE விருதை வென்றுள்ள இன்டர்நேசனல் டென்டல் கெயார்  (IDC) மருத்துவமனை

Apr 18, 2025

மாத்தறையில் அமைந்துள்ள முன்னணி தனியார் பல் மருத்துவமனையான இன்டர்நேஷனல் டென்டல் கெயார் (IDC) Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த பல் மருத்துவமனைக்கான விருதை வென்றுள்ளது. அதன் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் (திருமதி) சந்தியானி அமரசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களிடமிருந்து மேற்படி விருதை பெற்றுக்கொண்டார். 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட IDC மருத்துவமனை நாடெங்கிலுமுள்ள நோயாளர்களுக்கு பல் மருத்துவச் சிகிச்சைகளை வழங்கும் சிறந்த பல் மருத்துவமனை என்ற புகழை பெற்றுள்ளது. உள்நாட்டு நோயாளர்களுக்கு மேலதிகமாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நோயாளர்களும் தரமான பல் மருத்துவச் சிகிச்சைகளை பெறுவதற்கு இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்காலை வீதி, பள்ளிமுல்ல, மாத்தறை எனும் முகவரியில் அமைந்துள்ள IDC மருத்துவமனையில் பரந்தளவிலான பல் மருத்துவச் சிகிச்சைகளை பெற முடியும். பல் பிடுங்குதல், பற்களை நிரப்புதல், பற்களை சுத்தப்படுத்தல், நரம்புகளை நிரப்புதல், நிரந்தர பல் கட்டுதல், சிறுவர்களுக்கு பல் சார்ந்த சிகிச்சைகள், திரிபடைந்த பற்களை சீராக்குதல் (Plate இடுதல்) பல் ஒட்டுதல் போன்ற பல்வேறு சேவைகளை இம் மருத்துவமனை வழங்குகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் வலியின்றி பல் மருத்துவச் சிகிச்சைகளை பெற முடிகின்றமை நோயாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சிநேகபூர்வமிக்க, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தரமானதும் பயனுறுதிமிக்கதுமான சிகிச்சைகளை வழங்குவதற்கு மேலதிகமாக பற் சுகாதாரத்தை நீண்ட காலம் சிறப்பாக பேணுவதற்கு அறிவுறுத்தல் வழங்குகிறார்கள். சிறந்த பற் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் சகலருக்கும் நம்பிக்கையுடன் புன்னகைப்பதற்கான வாய்பபை ஏற்படுத்திக் கொடுப்பதே இம் மருத்துவமனையின் நோக்கமாகும். “இந்த வெற்றி எனக்கும் எனது பணியாட்டொகுதிக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. எம் அனைவரினதும் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் நோயாளர்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையே எமக்கு இந்த விருதை பெற்றுக்கொடுத்துள்ளது என அதன் தலைவர் திருமதி அமரசிங்க தெரிவித்தார்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close