August 16, 2025
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron
செய்தி

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

Apr 9, 2025

Chevron லூப்ரிக்கண்ட்ஸ் லங்கா பிஎல்சி (CLLP), இலங்கையில் Caltex வர்த்தகநாமத்தின் அதிஉன்னத லுப்ரிகண்ட்ஸின் முன்னணி வழங்குனாராக திகழ்கிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆகிய மஹேல ஜயவர்தன உடனான தனது வெற்றிகரமான கூட்டாண்மையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும், Caltex® Havoline® இற்கான விளம்பர தூதராக நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மூலோபாய கைகோரப்பின் நீட்டிப்பு, மஹேல ஜெயவர்தன அவர்கள் புகழால் நிறைந்த தன் முழுவதும் பகிர்ந்து கொண்ட முக்கிய மதிப்புகளான மேன்மை, புத்தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காக Chevron காட்டும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இலங்கை நுகர்வோர் மத்தியில் அவரது செல்வாக்கும் மக்களின் ஆழ்மன உணர்வில் அவர் கொண்டிருக்கும் தொடர்பும், Caltex Havoline இன் வர்த்தகநாமத்தை பெருவாரியான மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுடன் அதன் மீதான நம்பகத்தன்மையையும் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை குறித்து Chevron லூப்ரிக்கண்ட்ஸ் லங்கா பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேர்ட்ரம் போல் அவர்கள் உரையாற்றுகையில், “மஹேல ஜெயவர்தனவுடன் எங்கள் கூட்டாண்மையைத் தொடர்வது, எங்கள் வர்த்தகநாமத்தின் மதிப்புகளை சீரமைப்பதில் நாங்கள் அடைந்த வெற்றியைக் குறிக்கிறது, அவர் ஒரு சிறந்து விளங்கும் ஆளுமை என்பதோடு நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அவரது நற்பெயர் நுகர்வோரிடம் வலுவாக எதிரொலிக்கிறது. அத்துடன் உள்ளூர் சந்தையில் எங்கள் வர்த்தகநாமத்தின் பிம்பத்தை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இந்த வலுவான அடித்தளத்தை உருவாக்கி ஒன்றாக புதிய உயரங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

முந்தைய ஆண்டில் Caltex Havoline அடைந்த ஒரு மைல்கல் சாதனையைக்கு அடுத்தபடியாக இந்த கூட்டாண்மையின்  தொடர்ச்சி அறிவிக்கப்படுகிறது. உள்நாட்டு சூழல் நிலைமைகளின் கீழ் 10,000 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்ட எண்ணெய் பாவனையை வெற்றிகரமாக உறுதிப்படுத்தியதன்  மூலம் இவ்வர்த்தகநாமம் அதன் சிறந்த தயாரிப்பு திறனை நிரூபித்துக்காட்டியது. இலங்கையில் பயணிகள் கார் மோட்டார் எண்ணெய் (PCMO) பிரிவில் அதன் முன்நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மஹேல ஜெயவர்தனவும் இந்த கூட்டாண்மையைத் தொடர்வதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகையில், “நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் அபரிமிதமான தரம் ஆகியவற்றிற்கு ஒத்த ஒரு வர்த்தகநாமமான Caltex Havoline உடன் எனது கூட்டாண்மையை நீட்டிப்பதில் நான் பேருவகையடைகிறேன். உண்மையிலேயே சிறந்த செயற்திறனை வழங்கும் ஒரு தயாரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு புளகாங்கிதமான அனுபவமாகும். இலங்கை நுகர்வோரையும் Caltex Havoline வர்த்தக நாமத்தையும் இணைத்திடும் இந்தப் பயணத்தைத் தொடர நான் ஆர்வமாக உள்ளேன்” என்று கூறினார்.

தமது வாகன இயந்திரங்களை பாதுகாப்பதற்காக கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக  Caltex Havoline இன் மேம்பட்ட மோட்டார் எண்ணெய் தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்கள் தங்கியுள்ளனர்.

செவ்ரான் லுப்ரிகண்ட்ஸ் லங்கா பிஎல்சி, புத்தாக்கம் மற்றும் சிறந்து விளங்குவதில் உறுதியாக உள்ளது. இலங்கையின் நம்பகமான லுப்ரிகண்ட் வர்த்தக நாமமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது, தொடர்ந்து நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது மற்றும் மீறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close