March 18, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
செய்தி

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

Mar 18, 2026

இலங்கையில் BYD வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), 835 அலகுகளைக் கொண்ட BYD ATTO 1 வாகனங்களின் பாரிய தொகுதியை நாட்டுக்குக் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாதிரி இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இறக்குமதி செய்யப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத் தொகுதி இதுவாகும். அதுமாத்திரமின்றி, இந்த வாகனங்களில் ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 நவம்பரில் நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சியில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இலங்கையில் வாகன ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு வாகனமாக BYD ATTO 1 உருவெடுத்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வின் போது, இவ்வாகனம் பெருந்திரளான பொதுமக்களின் கவனத்தையும் பேரார்வத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் BYD நிறுவனத்தின் மிகவும் கட்டுப்படியாகும் விலையிலான தயாரிப்பாக இது விளங்குவதால், ஒரு தரமான புதிய சக்தி வாகனத்தை அதிகமான நுகர்வோர் அணுகுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த முழுமையான மின்சார ஹேட்ச்பேக் ((Hatchback) வாகனமானது, BYD-இன் நம்பகமான ‘பிளேட் பேட்டரி’ (Blade Battery) தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 300 கி.மீ தூரம் வரை பயணிக்கக்கூடிய ஆற்றல் மற்றும் 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்று ஆகிய சிறப்பம்சங்களை இது தன்னுள் கொண்டுள்ளது.

இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து பதிவான முன்பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களின் அதீத விசாரணைகள், கட்டுப்படியாகும் விலையிலான ‘புதிய சக்தி வாகனங்கள்’ மீதான இலங்கையர்களின் ஆர்வத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன. மக்கள் மத்தியில் காணப்பட்ட இந்த வரவேற்பினைத் தொடர்ந்து, இந்தச் சாதனை அளவிலான இறக்குமதியை விரைவாக மேற்கொள்வதற்கு JKCG Auto நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “ATTO 1 வாகனங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு வியக்கத்தக்கதாக உள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் சரியான விலையில் தயாரிப்புகளை வழங்கும்போது, இலங்கையர்கள் புதிய சக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளனர் என்பதை இந்தத் தேவை உறுதிப்படுத்துகிறது. இப்புதிய வாகனத் தொகுதியின் வருகையுடன், பொதுமக்களின் அந்த ஆர்வத்தை மதிப்பதோடு, உயர்தர மின்சார வாகனங்களை அதிகளவான இலங்கையர்களுக்குக் கொண்டு சேர்க்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.”  என்றார்.

835 அலகுகளின் இந்த வருகையானது, இலங்கையில் BYD நிறுவனம் பெற்றுவரும் வலுவான முன்னேற்றத்தை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச் செல்கின்றது. வாகன இறக்குமதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, JKCG Auto நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ், BYD நிறுவனம் நாட்டின் முதன்மையான வாகன வர்த்தக நாமமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையின் புதிய வாகனப் பதிவுகளில் சுமார் 37 சதவீதத்தையும், மொத்த மின்சார வாகனப் பதிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும் BYD தன்வசப்படுத்தியுள்ளது. எனவே, ATTO 1 வாகனங்கள் தற்போது அந்த வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதால், இலங்கை ஓட்டுநர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன தொழில்நுட்ப வாகனங்களை அனைத்து விலை நிலைகளிலும் அறிமுகப்படுத்தி, நாட்டின் புதிய சக்தி வாகன நிலப்பரப்பை விரிவுபடுத்த JKCG Auto தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close