November 28, 2025
2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெறும் MAS
News

2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெறும் MAS

Nov 27, 2025

உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான MAS Holdings, சமீபத்தில் நடைபெற்ற 2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில், நிலையான மற்றும் நெறிமுறையான உற்பத்திக்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கிற்காக பல விருதுகளை வென்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வி, MAS நிறுவனம் பெரிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் (Large Scale Manufacturing Enterprises) என்ற பிரிவின் கீழ், அதன் உற்பத்தி மற்றும் ஜவுளித் துறைகளுக்காக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் மற்றும் திறமைச் சான்றிதழ்களை வென்றது. இந்த விருதுகள், MAS குழுமத்தினர் தங்கள் வணிக செயல்பாடுகளின் திறனை மேம்படுத்துதல், சுற்றுப்புற சூழல் தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் நிறுவனத்தின் முழு உற்பத்தி செயல்முறை முழுவதும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் போன்ற நடைமுறைகளை இணைக்கும் தங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த விருதுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த நிகழ்வில், பெரிய அளவிலான உற்பத்தி தொகுப்பில் – ஆடைத் துறைக்கு, பியகம Silueta ஒரு தங்கப் பதக்கத்தையும், குளியாபிட்டியாவில் உள்ள MAS Intimates Slimtex மற்றும் ஹொரண Bodyline ஆகியன வெள்ளிப் பதக்கங்களையும் வென்றன. மேலும், மகியங்கணையில் உள்ள MAS Active Kreeda Shadeline ஒரு வெண்கலப் பதக்கத்தையும், பல்லேகலையில் உள்ள Contourline ஒரு திறமைச் சான்றிதழையும் வென்றன.

பெரிய அளவிலான உற்பத்தி தொகுப்பு – ஜவுளித் துறைக்கு, பியகமில் உள்ள MAS Active Linea Intimo ஒரு தங்கப் பதக்கத்தையும், துல்ஹிரியவில் உள்ள MAS Fabrics Intimo ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. மேலும், பியகமில் உள்ள Noyon Lanka இந்தத் துறையில் ஒரு திறமைச் சான்றிதழை வென்றது.

இலங்கையின் தேசிய தூய்மை உற்பத்தி மையம் (NCPC), தொழில் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி அமைச்சுடன் இணைந்து இந்த விருது வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. தேசிய தூய்மை உற்பத்தி விருதுகள், தூய்மை உற்பத்தி மற்றும் நிலையான நடைமுறைகளுக்கு குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. 2007 ஆம் ஆண்டில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, உற்பத்தி, சேவை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிலையான நடைமுறைகள் மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இலங்கை வணிகங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த விருதுகள், இலங்கையில் மிகவும் பொறுப்பான உற்பத்திச் சூழலை உருவாக்குவதில் MAS நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில் 2030க்கான தனது இலக்குகளை வெளியிட்ட நிறுவனத்தின் விரிவான ” Plan for Change” இதற்கு சிறந்த சான்றாகும். MAS Holdings இன் நிலையான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் “Plan for Change 2030”, உற்பத்தி, வாழ்க்கை மற்றும் சுற்றுப்புற சூழல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் தனது தாக்கத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்டகால நிலையான உத்தியாகும்.

MAS நிறுவனம், தூய்மை உற்பத்தியை மேம்படுத்துதல், சுற்றுப்புறப் பொறுப்பை வலுப்படுத்துதல் மற்றும் வளத் திறமை, பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் போன்ற நடைமுறைகள் வழியாக இலங்கையை அழைத்துச் செல்லும் பயணத்திற்கு ஆதரவாக தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close